The ipl
திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இந்நிலையில் 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய வெற்றிகரமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியும் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தியது.
இருப்பினும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்திடம் தோற்று வெளியேறிய அந்த அணி இந்தளவுக்கு போராடி வந்ததே பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். மேலும் அந்த அணிக்கு நேஹல் வதேரா, ஆகாஷ் மாத்வால் போன்ற சில வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களும் இந்த சீசனில் கிடைத்தனர். அதில் முதன்மையானவராக இளம் வீரர் திலக் வர்மா மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவைப் போல் பேட்டிங் செய்வதாக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
Related Cricket News on The ipl
-
ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டன் ஆவார் - மைக்கேல் வாகன்!
விரைவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ...
-
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரிசர்வ் டேவால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி; 2019 நினைவில் வந்து போவதே காரணம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி மழை காரணமாக ரிசர்வ் டேவுக்கு மற்றப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இன்றாவது போட்டி நடைபெறுமா? முடிவு யாருக்கு சாதகம்? - ஹர்ஷா போக்லேவின் பதில்!
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி இன்றும் நடைபெறாமல் போனால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆட்டம் காட்டிய மழை; ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்ட இறுதிப்போட்டி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
இறுதிப்போட்டி நிச்சயம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக அமையும் - சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து வாசிம் அக்ரம் கருத்து!
ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மழையால் தாமதமாகும் இறுதிப்போட்டி; மாற்று ஏற்பாடுகள் என்ன?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் ரசிகர்கள் கவலையடைந்து உள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சென்னை வெற்றி பெற வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் வெளியேறி இருப்பதால், அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தவுள்ள எம்எஸ் தோனி!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் களமிறங்குவதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். ...
-
கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துவோம் - ஸ்டீபன் ஃபிளெயிங்!
முதலில் ஷுப்மன் கில்லை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24