The ipl
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனாலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததுடன், 77 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது. பஞ்சாப் அணி தரப்பில் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து ஆர்சிபியின் வெற்றியும் உறுதியானது.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: அரைசதம் கடந்து அசத்திய சஞ்சு சாம்சன்; லக்னோ அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவை முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆர்சிபி அணியின் கோ க்ரீன் ஜெர்சி அறிமுகம் செய்த விராட் கோலி!
சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24