The t20
பாபர் ஆசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் - ஜெயவர்தனே புகழாரம்!
சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் 5ஆவதாக சேர்ந்ததுடன், மிக விரைவிலேயே இந்த ஜாம்பவான்களை எல்லாம் ஓரங்கட்டி டாப்பிற்கு சென்றுவிட்டார் பாகிஸ்தானின் பாபர் ஆசாம்.
இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3122 ரன்களை குவித்துள்ள பாபர் அசாம், 89 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 4442 மற்றும் 2686 ரன்களை குவித்துள்ளார். கேப்டன்சி அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்துவிடாமல் இரண்டையுமே சிறப்பாக செய்துவரும் பாபர் அசாம், இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, “பாபர் ஆசாம் 3 விதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடிவருகிறார். அவர் 3 ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார். அவர் கிஃப்ட்டாக கிடைத்த பிளேயர். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடுகிறார்.
டெக்னிக், டைமிங், நிதானம் என அனைத்தையுமே ஒருசேர பெற்று, பேட்டிங்கில் அசத்துகிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டுக்கும் என்ன தேவை என்பதை, எப்படி ஆடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப திறம்பட தன்னை தகவமைத்து தெளிவாக செயல்படுகிறார். கேப்டன்சியிலும் ஜொலித்து பேட்டிங்கிலும் ஜொலிப்பது எளிய விஷயம் அல்ல. அதை பாபர் செய்கிறார்” என புகழாரம் சூட்டினார்.
Related Cricket News on The t20
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறிய பிரையன் லாரா!
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய முன்னாள் கேப்டனுக்கு பெரிய ஆதரவை கொடுத்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் நிச்சய டி20 உலகக்கோப்பை விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கை ஆடவைப்பதற்காக யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
காயத்தால் ஆசிய கோப்பையை தவறவிடும் ஹர்ஷல் படேல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சல் பட்டேல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் முகமது ஷமி; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து முகமது ஷமி முற்றிலும் நீக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. ...
-
தரவரிசைப் பட்டியளில் புதிய உச்சத்தைத் தொடும் சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4ஆவது டி20 போட்டியில் பிரமாண்ட சாதனையை படைக்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு திரும்ப பவர் ஹிட்டிங் பயிற்சி மேற்கொண்டேன் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணிக்கு திரும்புவதற்காக, ஐபிஎல் சீசனுக்கு முன்பே பவர் ஹிட்டிங் தொடர்பாக பயிற்சி மேற்கொண்டேன். இந்த பயிற்சியை சில வருடங்களுக்கு முன்பே நான் செய்திருந்தால், தொடர்ந்து வாய்ப்பு கிடைத்திருக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
புதிய முயற்சியில் சஞ்சு சாம்சன்; ‘இவரையும் மாத்திட்டாங்களே’!!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சு சாம்சன் பந்துவீசும் காணொளியை வெளியிட்டுள்ளது. ...
-
NED vs NZ, 2nd T20I: சாண்ட்னர் அதிரடியில் நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஆர்ஷ்தீப் சிங்கை தேர்வு குழு, தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47