The tour
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்குm இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Related Cricket News on The tour
-
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேட் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
BAN vs SA 2nd Test: சதமடித்து அசத்திய ஸோர்ஸி, ஸ்டப்ஸ்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்தது சரியான முடிவு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன் - சுரேஷ் ரெய்னா!
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன். அவர் நம்பமுடியாத திறமையானவர் மற்றும் அவரிடமிருந்து இன்னும் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் வர உள்ளன என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ...
-
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச அணி வீரர் ஜக்கார் அலி விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் யார்?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டன் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. ...
-
பேட்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டியது அவசியம் - ஹர்மன்பிரீத் கவுர்!
இப்போட்டியில் அதிமான கேட்ச்சுகளை தவறவிட்டதுடன், ஃபீல்டிங்கிலும் ரன்களை கட்டுப்படுத்த தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 14 பேர் அடங்கியா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
INDW vs NZW, 2nd ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய சோஃபி டிவைன்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
INDW vs NZW, 2nd ODI: சோஃபி டிவைன், சூஸி பேட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 260 ரன்களை இலாக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47