This indian
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது முதல் பாதியைக் கடந்து தற்போது இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிரங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் சாம் கரண் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பௌ தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 9 ரன்களோடு நடையைக் கட்ட, மறுபக்கம் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கேப்டன் சான் கரணும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா இப்போட்டியிலாவது அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on This indian
-
ரஸல் தனது முதல் ஓவரிலேயே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பினார் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு; பஞ்சாப்பை 142 ரன்னில் சுருட்டியது குஜராத்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்ச்சையான மூன்றாம் நடுவர் தீர்ப்பு; விரக்தியடைந்த விராட் கோலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; ஆர்சிபி அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கேமரூன் க்ரீன் - வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பவர்பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் முதல் 6 ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசினார்கள் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் சிக்ஸர் மழை பொழிந்த ஹைதராபாத் பேட்டர்கள்; டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட 100 சதவீதம் உறுதியுடன் இருக்கிறேன் என்று அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24