Up t20
அழுத்தத்தை கையாள நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷித் கான்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸா ஹென்றிக்ஸ் (29) - கேப்டன் ஐடன் மார்க்ரம் (23) ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் மார்கோ ஜான்சென் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Up t20
-
வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது - ஐடன் மார்க்ரம்!
இதன் பிறகு இன்னமும் ஒரேயொரு போட்டிதான் இருக்கிறது. இது எங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு, அதனால் இதுகுறித்து பயப்பட ஒன்றுமில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணி எனும் ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி சமன்செய்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
T20 WC 2024: புதிய வரலாறு படைத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். ...
-
T20 WC 2024, Semi Final 1: ஆஃப்கானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அரையிறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருவதால், நாங்களும் அதற்கு தயாராக வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ரஷித் கானிற்கு அபராதம் - ஐசிசி நடவடிக்கை!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!
நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என இன்ஸமாம் உல் ஹக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அஃப்ரிடி, மலிங்காவின் சாதனையை முறிடிக்க காத்திருக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைப்பார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!
சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் காயம் ஏற்பட்டதுபோல் நடித்தது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24