Virat kohli rajat patidar
இது உங்களுக்கு மிகவும் தகுதியான பொறுப்பு - பட்டிதாருக்கு விராட் கோலி வாழ்த்து!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இத்தொடரானது மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதற்கேற்றவகையில் அந்த அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டுமே தக்கவைத்துடன் மற்ற வீரர்களை அணியில் இருந்து கழட்டிவிட்டது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஃபாஃப் டூ பிளெசிஸையும் கழட்டிவிட்டது. இதனையடுத்து ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோரை வாங்கியுள்ளது.
Related Cricket News on Virat kohli rajat patidar
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருப்பதாகவும், ஆனாலும் நாளைய போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் வரலாற்றில் பல சிறந்த இன்னிங்ஸைப் பார்த்திருந்தாலும், ராஜத் பட்டிதார் ஆடிய இன்னிங்ஸைப் போல் நான் பார்த்தது இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24