Wi vs ind 3rd t20i
SL vs IND, 3rd T20I: பந்துவீச்சில் அசத்திய இலங்கை; 137 ரன்களில் சுருண்டது இந்தியா!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், ரிங்கு சிங் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், ஷிவம் தூபே 13 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Wi vs ind 3rd t20i
-
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மேற்கொடு 76 ரனகளை சேர்க்கும் பட்சத்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
SL vs IND, 3rd T20I: இலங்கையை வைட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
திலக் வர்மா மனதளவில் மிகவும் வலிமையானவர். நீங்கள் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் வந்து இந்திய அணிக்காக விளையாடும் பொழுது உங்களுக்கு மிகவும் தேவையான விஷயம் இதுதான் என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - ரோவ்மன் பாவெல் நம்பிக்கை!
இந்த போட்டியில் பந்து வீச்சின் போது கூடுதலான வேகத்தை கொடுத்து விட்டோம். அது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பது என் கைகளில் இருக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
ஓவர்கள் குறைவாக இருக்கும் பொழுது டி20 கிரிக்கெட் போல மாறி விளையாட வேண்டும். எனது ஒருநாள் கிரிக்கெட் நம்பர்கள் மோசமாக இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு வெட்கமில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. ...
-
நான் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக தயாராகினேன் - முகமது சிராஜ்!
இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த விக்கெட் பந்துவீச்சுக்கு கை கொடுத்தது என முகமது சிராஜ் என தெரிவித்துள்ளார். ...
-
மூத்த வீரர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்!
ரன்களை நிறுத்த வேண்டும் அல்லது விக்கெட்டைப் பெற வேண்டும் என்று அணிக்கு தேவைப்படும்போது நான் முன்னேறி சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரருடன் போட்டி போட்டு விளையாட வேண்டும் - ஃபின் ஆலன்!
விராட் கோலியை விட விருப்பத்திற்குரிய பேட்ஸ்மெனாக சூரியகுமார் யாதவ் வளர்ந்துள்ளார் என்று நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஃபின் ஆலென் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24