With shubman gill
சச்சின், விராட் கோலியுடன் அவரை ஒப்பிட வேண்டாம் - ஷுப்மன் கில் குறித்து கபில்தேவ் கருத்து!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ஹர்திக் பாண்டிய தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. அதில் குஜராத் அணி இந்தளவுக்கு சிறப்பாக ஃபைனலுக்கு தகுதி பெற அதன் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஷுப்மன் கில் பேட்டிங்கில் 851 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்று முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய அவர் 2019இல் சர்வதேச அளவில் அறிமுகமாகி 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்வதற்கு 483 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய காரணத்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார்.
Related Cricket News on With shubman gill
-
இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன் - ஷுப்மன் கில்!
சிக்ஸ் அடிப்பது என்பது உடனே முடிவெடுத்து நடக்கக் கூடியது அல்ல. நீங்கள் தொடர்ந்து அதற்காக உருவாக வேண்டும். நம்பிக்கை மிகவும் முக்கியம் என ஆட்டநாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
யாரோ ஒருவரை த்ரோ போட வைத்து அடிக்கும் மாதிரி ஷுப்மன் கில் இன்று பவுலர்களை எதிர்கொண்டு அதிரடி காட்டினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!
குஜராத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா ஷுப்மன் கில் நம்ப முடியாத அளவிற்கு மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
ஷுப்மன் சிக்சர் அடிப்பதை வியர்ந்து பார்க்கும் ரோஹித்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில் சிக்சர் அடிப்பதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வியந்து பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சதத்தைப் பதிவுசெய்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 234 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - ஷுப்மன் கில்!
எந்த வீரராக இருந்தாலும் சரி நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் தங்கையிடம் அத்துமீறிய ஆர்சிபி ரசிகர்கள்!
ஆர்ச்பி அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்து குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நிலையில், அவரது தங்கையின் சமூக வலைதளங்களில் சில அபாசமான கருத்துகளை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
-
இந்திய அணியின் அடுத்த சச்சின், கோலி யார்? - உத்தாப்பாவின் பதில்!
சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதிலளித்துள்ளார். ...
-
இதுபோல இன்னும் நிறைய சதங்கள் வரும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தது மிகவும் மகிழ்ச்சியானது என குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47