Wtc
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மார்னஸ் லபுஷேன் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லபுஷாக்னே 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரினுடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இந்த இணை நிதானமாக விளையாடியது. கேமரூன் கிரீன் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார்.
Related Cricket News on Wtc
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் ஆஸி; கட்டுப்படுத்துமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஸியை 350 ரன்ளுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ரஹானேவின் பேட்டிங் டெக்னிக் முழுமையாக இல்லை - ஆகாஷ் சோப்ரா!
ரஹானே சிறப்பாக விளையாடினாலும் அவரது பேட்டிங் டெக்னிக் தனக்கு முழுத்திருப்தியாக இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரரும் ஆன ஆகாஷ் சோப்ரா அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார். ...
-
450 ரன்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் - ஷர்துல் தக்கூர்!
ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் 450 ரன்களையும் எட்டி வெற்றி பெறலாம் என்று இந்தியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் தலைசிறந்த சேஸர் விராட் கோலி - சவுரவ் கங்குலி!
உலகின் தலைசிறந்த சேஸர் என அறியப்படுபவர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023 Final: ஆஸிக்கு தண்ணி காட்டும் ரஹானே, ஷர்துல் இணை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023 Final: 5ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்திய ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரன உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே 5000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். ...
-
மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - சவுரவ் கங்குலி!
ஆஃப் ஸ்பின்னர் பச்சை ஆடுகளத்தில் விளையாட முடியாது என்று யார் சொன்னது? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
புஜாராவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் இந்நிலைமைக்கு இவர்கள் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் சாடல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியதே விக்கெட்டுகள் இழந்ததற்கு காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!
தற்போது உள்ள நிலைமையில் இருந்து இந்திய அணி கட்டாயம் ஜெயிக்க முடியாது என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ...
-
க்ளீன் போல்டாகிய புஜாரா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47