%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%9A 2024
IND vs ENG: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலி விலகல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Related Cricket News on %E0%AE%8E%E0%AE%B2%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%9A 2024
-
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. ...
-
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
சத்தீஸ்கர் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பிரித்வி ஷா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ...
-
AUS vs WI, 1st T20I: வார்னர், டிம் டேவிட் அதிரடி; விண்டிஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதற்கான விஷயத்தில் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: சிக்சர் மழை பொழிந்த கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 212 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: பாகிஸ்தான் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
இந்திய தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் - ரெஹான் அஹ்மத் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரெஹான் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24