ind vs ban
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். மேற்கொண்டு எதிர்வரும் பார்பர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வரவிருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு முழு ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக துலீப் கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது பும்ரா தொடர்பான மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவை விளையாடவைத்து, அதன் பின்னர் அவர் நியூசிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் ஓய்வளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் சுழற்றுவதன் மூலம் அவர்களை பயன்படுத்த பிசிசிஐ விரும்புகிறது.
Related Cricket News on ind vs ban
-
என்னால் 5 கீ.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓட முடியும் - ஃபிட்னஸ் குறித்து சர்ஃப்ராஸ் கான்!
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அதற்காக தயாராக இருப்பேன் என இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், மாற்று வீரருக்கான தேர்வில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரிடையே போட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
வங்கதேச மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான மைதானங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாற்றங்களை செய்துள்ளது. ...
-
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஹர்திக் பாண்டியா தான். அவரால் இதனை தொடர்ந்து செய்ய முடியுமானால் அது எங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என எந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 6ஆம் இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: ஹர்திக் பாண்டியா அரைசதம்; வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட், சூர்யா விக்கெட்டை வீழ்த்திய தன்ஸிம் ஹசன் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர் தான்ஸிம் ஹசன் ஷாகிப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூபப்ர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24