indian cricket
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இத்தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களை பூர்த்தி செய்வதுடன், கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.
Related Cricket News on indian cricket
-
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரை தவறவிடும் சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன், அதிலிருந்து குணமடைய 5 முதல் 6 வாரம் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன் -ஹர்பஜன் சிங்!
அபிஷேக் சர்மா தனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ...
-
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47