rr vs srh
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் கடந்தார். பின்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 28 ரன்களிலும், ரிஷப் பந்த் 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு அணிக்கு சிறப்பாக ஒரு ஸ்கோரை கொண்டு சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் சிங், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷித் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தியதோடு, அணியை வெற்றியை நோக்கியும் அழைத்து சென்றார்.
அதன்பின் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவை என்ற நிலையில் வில்லியம்சன் ஒரு பவுண்டரி, சுஜித் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்து போட்டியை டிரா செய்தது.
இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் இணை களமிறங்கி 7 ரன்களை எடுத்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணிக்கு ரிஷப் பந்த், ஷிகர் தவான் களமிறங்கினர்.இதில் ரஷித் கான் வீசிய மூன்றாவது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on rr vs srh
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் யார்க்கர் நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டை சே ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணியை பந்தாடியது ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. ...
-
வலிமையான பேட்டிங் இல்லாத வரை தோல்வி மட்டும் தான் - டேவிட் வார்னர் வருத்தம்
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைச ...
-
ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
விரைவில் களமிறங்குவேன் - வில்லியம்சன் நம்பிக்கை
முழங்கை தசையில் சிறிய பிளவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நியூசிலாந்து அணி கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரருமான கேன் வில்லியம்சன், இன்னும் ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
எச்சரிக்கை மணியடித்த ஐபிஎல்; மன்னிப்பு கோரியதால் தப்பிய கோலி!
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹ ...
-
ஐபிஎல் 2021: ‘கேகேஆர் தான் அப்படினா, எஸ்.ஆர்.எச். அவங்களையே மிஞ்சுடுவாங்க போலயே’ பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்ச ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: முதல் வெற்றிக்கு போராடும் ஹைதராபாத்; வெற்றியைத் தக்கவைக்க முனையும் பெங்களூரு!
ஐபிஎல் தொடர் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக ...
-
'நாங்கள் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம்' - டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிற ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24