sa vs pak
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். அதிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் பாகிஸ்தானுடன் விளையாடும்போது, அது எப்போதும் சவாலானதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை வீழ்த்தி அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டும் என்பதை மற்றொரு எதிரணியாக மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் இப்போட்டியில் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Related Cricket News on sa vs pak
-
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
உலகக் கோப்பையில் விளையாடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. அதனால் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் எங்களுடைய அனைத்து முயற்சியையும் கொடுத்துள்ளோம் என்று அமெரிக்க அணி கேப்டன் மொனாங்க் படேல் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது - பாபர் ஆசாம்!
வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ...
-
T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் வீரர் அசாம் கான், பெவிலியன் திரும்பும் போது ரசிகரிடம் கோபத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஸ்டீவன் டெய்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை அப்செட் செய்யுமா அமெரிக்கா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் அடுத்தடுத்து கேட்சுகளை விட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47