south africa cricket team
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. மேலும் விராட் கோலிக்கு பின் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய கேப்டன் எனும் பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றார்.
Related Cricket News on south africa cricket team
-
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
எங்களது அணியின் தொடக்க வீரரான ஸோர்ஸி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸையும் சரியாக கட்டமைத்து சதம் அடித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்க அணி கண்டிப்பாக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!
குயிண்டன் டி காக் தன்னுடைய கெரியரை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று யோசித்து இருப்பார். இருப்பினும் இந்த போட்டியை அவர் மறக்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டூ பிளெசிஸ்?
டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்சிஸை தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் சேர்க்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs WI: தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டத்தையடுத்து, முன்னாள் கேப்டன் டெம்பா பவுமா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணியில் லிசாட் வில்லியம்ஸ் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. ...
-
ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை மாற்றி மோசமான சாதனைப் படைத்த தென் அப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47