Advertisement
Advertisement
Advertisement

Afghanistan

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
Image Source: Google
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!

By Bharathi Kannan July 31, 2024 • 15:33 PM View: 99

வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

இந்நிலையில் இத்தொடருக்காக தகுதிப்பெற்ற அனைத்து அணிகளும் தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இன்று அறிவித்துள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் நேருநேர் மோதும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

Related Cricket News on Afghanistan