An indian
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கேகேஆர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு அபாரமான தொடக்கத்தைக் கொடுப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பின் இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை ஓரளவு தக்குப்பிடித்து விளையாடியதுடன் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியிலும் இறங்கினர்.
Related Cricket News on An indian
-
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: ஸ்டார்க், ரஸல் அபாரம்; சன்ரைசர்ஸை 113 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்!
ஆஸி முன்னால் வீரர் மேத்யூ ஹைடன் தேர்வு செய்துள்ள ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். ...
-
மீண்டும் முதல் ஓவரில் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஸ்டார்க்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் தொடரை விட ஐபிஎல் சிறந்தது - மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த தங்களது அணி வீரர்களை திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட் கோலி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீர்ர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது. ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
நான் பந்துவீசுவதை பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன் - அபிஷேக் சர்மா!
தற்போது நான் சிறப்பாக பந்துவீசுவதை பார்த்து யுவராஜ் சிங் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நடராஜன் பந்துவீச்சில் காயமடைந்த துருவ் ஜுரெல் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் துருவ் ஜுரெல் கயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
டேனியல் வெட்டோரியின் ஆலோசனை எங்களுக்கு பெரிதும் உதவியது - பாட் கம்மின்ஸ்!
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் - சஞ்சு சாம்சன்!
பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை, ஆனால் பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24