Bangladesh cricket team
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டவுள்ளார். மேற்கொண்டு இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையையும் அவர் படைப்பார்.
Related Cricket News on Bangladesh cricket team
-
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியானது இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளது. ...
-
PAK vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கபட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் பளார் என்று அறைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேச ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆலன் டொனால்ட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன?
வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதத்தை கிளப்பிய நிலையில், மறுநாளே உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47