Charith asalanka
நாங்கள் அடித்த ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது - சரித் அசலங்கா!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Charith asalanka
-
SL vs IND, 2nd ODI: வண்டர்சே, அசலங்கா சுழலில் வீழ்ந்தது இந்தியா; இலங்கை அசத்தல் வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 1st ODI: பந்துவீச்சில் அசத்திய அசலங்கா, ஹசரங்கா; டை -யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை இலக்கை அணி படைத்துள்ளது. ...
-
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இந்த போட்டியில் நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் உட்பட எங்கள் மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24