Cl trophy
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி அபார வெற்றி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது 321 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக முஷீர் கான் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 181 ரன்களையும், நவ்தீப் சைனி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் - கேப்டன் ஷுப்மன் கில் இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Cl trophy
-
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய பி அணி 240 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: மானவ் சுதர் அபாரம்; இந்தியா சி அணி அசத்தல் வெற்றி!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சி அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2024: பந்துவீச்சில் கலக்கிய மனவ் சுதர்; மீண்டும் தடுமாறும் இந்தியா டி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். அதனால் இதில் இரு அணிகளும் வெற்றி பெற 50-50 வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மகாராஜா கோப்பை 2024: கார்த்திக், கருண் நாயர் அசத்தல்; கோப்பையை வென்றது மசூர் வாரியர்ஸ்!
பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணியானது 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகாராஜா கோப்பை 2024: குல்பர்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிரான மகாராஜ கோப்பை அரையிறுதிப்போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47