Cricket
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணிக்கான போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் 5ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 4 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த சைம் அயுப்பும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 13 ரன்னிலும், கேப்டன் சல்மான் அலி ஆக 19 ரன்னிலும், உசைன் தாலத் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Cricket
-
மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் அஸ்வின்; எந்த அணிக்கு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது, ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பந்த், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!
பாகிஸ்தான் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , டேவிட் மில்லர், மேத்யூ பிரிட்ஸ்கீக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
IRE vs ENG, 3rd T20I: ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSU19 vs INDU19, 1st ODI: வேதந்த், அபிக்யான் அரைசதம்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
IN-W vs AU-W, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47