Cricket
கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!
2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நிறைய தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன்பின் பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் போட்டிகளில் தோற்ற அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும், துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இறுதிப்போட்டிகளில் தோற்றது.
இந்த அனைத்து தோல்விகளுக்கும் சுமாரான பிட்ச் உருவாக்கியது முதல் சொதப்பலான அணி தேர்வு செய்தது வரை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் வாரிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஷ் ராஜா முக்கிய காரணமாக அமைந்ததால் கடந்த வாரம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க உங்களது நாட்டுக்கு வர முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்த நிலையில் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாங்களும் வரமாட்டோம் என்று அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
Related Cricket News on Cricket
-
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது. ...
-
100-ஆவது போட்டியில் சதம் விளாசிய டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ஒரே சதத்தில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களின் சாதனையை தகர்த்து பாபர் ஆசாம் புதிய சாதனை படைத்தார். ...
-
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் த்ரில் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடுவது குறித்து முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ, 1st Test: பாபர் ஆசாம் அபார சதம்; சதத்தை தவறவிட்ட சர்ஃப்ராஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. ...
-
கென்ய அணியில் இடம்பிடித்த இந்தியர்; யார்ந்த் இந்த புஷ்கர் சர்மா?
இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தேர்வாகியுள்ளார். ...
-
பிபிஎல் 2022: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
Boxing Day Test: சீட்டுக்கட்டாய் சரிந்த தென் ஆப்பிரிக்கா; க்ரீன் அபாரம்!
தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்; பாபர் ஆசாம் அரைசதம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 4 விக்கெடுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ராகுலின் திறமையை புரிந்து ஆதரவுக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவருக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
-
‘அஸ்வின் ஒரு விஞ்ஞானி’ - வைரலாகும் சேவாக் ட்வீட்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47