Cricket news
சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா வரவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும் - பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியம்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்தும் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் நடைபெற இருந்தாலும், ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.
ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அஹ்மதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Related Cricket News on Cricket news
-
இந்த ஆட்டம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் என்னுடைய அனைத்து வகையான ஷாட்டுகளையும் இந்த போட்டியில் வெளிப்படுத்த விரும்பினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் என்னுடைய ரோல் இது தான் - ரிங்கு சிங்!
இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது விளையாடி வருகிறோம் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை - சூர்யகுமார் யாதவ்!
கடந்த போட்டியின் போதே ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். இன்றும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: ஆஸியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
ஐபிஎல் 2024: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்!
எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் ரூ. 15 கோடி வரை கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ...
-
IND vs AUS, 2nd T20I: கெய்க்வாட், ஜெய்ஷ்வால் அரைசதம்; ஆஸிக்கு 236 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாதி வீரர்களை அணியை விட்டு நீக்கி அதிர வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்!
வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!
நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறேன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் ரன் அவுட்டக்கிற்காக இன்றளவும் அவரது ரசிகர்கள் திட்டிவருகின்றனர் - மார்ட்டின் கப்தில்!
நான் தோனியை ரன் அவுட் செய்ததிலிருந்து இந்திய ரசிகர்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது. இன்றளவும் தோனியின் ரசிகர்கள் அவரை ஏன் ரன் அவுட் செய்தீர்கள்? என்று என்னை திட்டி தீர்த்தவாறு மெயில் அனுப்பி வருவதாக நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கூறியுள்ளார். ...
-
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47