Cricket news
கிரிக்கெட்டை தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக மாறிய முகமது ஷமி - வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், தற்போது அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவென நிரூபித்துள்ளார். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கார் விபத்துள்ளாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காருக்கு முன் நடந்துள்ளது.
அப்போது, விபத்தை பார்த்த அவர் தனது காரை நிறுத்தி காரில் இருந்தவர்களை காப்பாற்றியுள்ளார். இந்த முழு சம்பவத்தின் காணொளையையும் முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட தகவலில்படி, நனிடால் செல்லும்போது, சிறிது தூரத்திற்கு முன்பு அவருக்கு முன்னால் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது காரில் சிலர் இருந்துள்ளனர். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை தனது நண்பர்களுடன் வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.
Related Cricket News on Cricket news
-
ஐபிஎல் 2024: டிரேடிங் முறையில் வீரர்களை மற்றிய ஆர்சிபி - எஸ்ஆர்எச்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஷபாஸ் அஹ்மதை ஹைதராபாத் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் மயங்க் டாகர் ஆர்சிபி அணிக்காகவும் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
எல்எல்சி லீக் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் என்ன முயற்சி செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. அவர் தவறான ஷாட்டுகளை விளையாடியது மட்டுமின்றி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக சயீத் அஹ்மல், உமர் குல் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உமர் குல்லும் செயல்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்!
இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு வீரரை நம்பாமல் இருந்ததை சுட்டிக் காட்டி கௌதம் கம்பீர் விளாசி இருக்கிறார். ...
-
பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை படைத்த உலகக்கோப்பை 2023!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக மாறியுள்ளது. ...
-
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
அதிக தன்னம்பிக்கை உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும் - ஷாகித் அஃப்ரிடி!
தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு தோல்வியை கொடுக்கும் என்று இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47