Advertisement
Advertisement
Advertisement

Eng vs

ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Image Source: Google
Advertisement

ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

By Bharathi Kannan August 20, 2024 • 21:00 PM View: 79

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் துணைக்கேப்டனாகவும் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Related Cricket News on Eng vs