England cricket team
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். அவர் இப்போட்டியில் 111 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 120 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் அவர் 2084 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அவர் தனது கடைசி ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்திருந்தார்.
Related Cricket News on England cricket team
-
இது ஒரு தனித்துவமான தொடர் - இந்திய அணியை சாடிய ஜோஸ் பட்லர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் மட்டும் விளையாடுவதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்துள்ளார். ...
-
CT 2025: தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ரெஹான் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் புதிய வரலாறு படைத்த பென் டக்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பின்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பென் டக்கெட் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - இசிபி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
‘கிரிக்கெட் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள்' - பத்திரிக்கையாளரை கண்டித்த கெவின் பீட்டர்சன்!
இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக செய்தி எழுந்திய நபரை அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணியாக உள்ளனர் - ஜோஸ் பட்லர்!
இந்த முழு சுற்றுப்பயணத்திலும் எங்கள் அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் எனக்கு கவலையில்லை - பென் டக்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தாலும் அது தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அணியின் ஒரே கவனம் சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் மட்டுமே இருக்கும் என்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்ட்ர் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24