Fa board
காயத்தால் அவதிப்படும் மார்க் வுட்; இந்தாண்டு முழுவது விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லார்ட்ஸில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக தனது ஓவரை முடிப்பதற்கு முன்னரே பெவிலியன் திரும்பினார். அதன்பின் அந்த ஓவரில் மீதமிருந்த பந்துகளை ஜோ ரூட் வீசினார். இந்நிலையில் மார்க் வுட்டின் காயம் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
Related Cricket News on Fa board
-
நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் ஹெர்த், விக்ரம் ரத்தோர்!
ஆஃப்கானிஸ்தான், இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் ரங்கனா ஹெர்த் மற்றும் விக்ரம் ரத்தோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நாதன் ஸ்மித், ஜோஷ் கிளார்க்சன்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் நாதன் ஸ்மித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரானது ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி முடிவடையும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகும் சோஃபி டிவைன்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நியூசிலாந்து அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரஷித் கானிற்கு ஓய்வு; காரணம் இது தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாகவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷனான் கேப்ரியல்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷனான் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்துள்ளார். ...
-
AFG vs NZ: டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 20 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது. ...
-
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியானது தங்கள் அணியின் துணை பயிற்சியாளரகாக ராமகிருஷ்ணன் ஸ்ரீதரை நியமித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24