For india
சவாலளித்த நேபாள் வீரர்களுக்கு பரிசளித்த இந்த வீரர்கள் - வைரல் காணொளி!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் நேபாளை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் 48.5 ஓவரில் 230 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து இந்தியா பேட்டிங்கை துவக்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 74 ரன்களும், ஷுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் நேபாள் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக அறியப்படும் நேபாள் ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் இந்தியாவை எதிர்கொண்டது.
Related Cricket News on For india
-
பாகிஸ்தானுடனான போட்டியில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தது - ஷுப்மன் கில்!
ரோகித் பந்துவீச்சாளர்களை காற்றில் அடிக்க விரும்பக்கூடிய ஒரு வீரர். நான் தரையோடு பவுண்டரி அடிக்க விரும்பும் ஒரு வீரர் என்று இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் கூறியுள்ளார். ...
-
இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே, ஆனால் ஃபீல்டிங் மிக மோசம் - ரோஹித் சர்மா!
நாங்கள் இங்கு வந்த பொழுதே எங்களுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்று தெரியும். ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NEP, Asia Cup 2023: ரோஹித், ஷுப்மன் அதிரடி; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
நேபாளம் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!
தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
ஒரு விக்கெட் கீப்பரின் பார்வையில் இருந்து இதை மன்னிக்கவே முடியாது. இது நேரடியாக கைக்கு வந்த கேட்ச் என ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!
பல அணிகள் விளையாடும் தொடர்களில் தனது 100ஆவது கேட்சை பிடித்துள்ள விராட் கோலி, முகமது அசாரூதினுக்கு பின் இச்சாதனையை செய்யும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். ...
-
IND vs NEP, Asia Cup 2023: பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள் பேட்டர்ஸ்; இந்தியாவுக்கு 231 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்?
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
விராட் கோலி சிறந்த வீரர். மேலும் அவர் இந்தியாவின் முதுகெலும்பு என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: அச்சுறுத்தும் மழை; சூப்பர் 4 சுற்றுக்கான மைதானம் மாற்றம் - தகவல்!
மழை அச்சுறுத்தல் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: இந்தியா - நேபாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டால் என்ன ஆகும்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதவுள்ள நிலையில், மழை குறுக்கீடு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு!
இவ்வாறு செயல்படுவதால் முதன்மையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பரம எதிரியாக கருதி சிறப்பாக செயல்படும் உத்வேகம் இந்திய வீரர்களுக்கு இல்லாமல் போவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் பவுலர்கள்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47