From australia
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை அஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியதுடன், நியூசிலாந்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
Related Cricket News on From australia
-
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்ன விலகியுள்ளார். ...
-
டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
நடப்பு நியூசிலாந்து டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st T20I: மார்ஷ், டேவிட் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs AUS, 1st T20I: பவுண்டரி மழை பொழிந்த ரச்சின், கான்வே; ஆஸிக்கு 216 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 216 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24