Gautam gambhir
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? பாலாஜி & ஜாகீர் இடையே கடும் போட்டி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Related Cricket News on Gautam gambhir
-
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட உங்களுக்கு வேறு எதும் பெரிய மரியாதை இல்லை என பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
கேகேஆரை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் அடுத்த இலக்கு - கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு என அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சஞ்சு சாம்சன் தனது திறமையை உலகுக்கு காட்டுவார் - கௌதம் கம்பீர்!
ஒரு கிரிக்கெட் வீரரை ஐந்து நிமிடம் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். சஞ்சு சாம்சன் விளையாடுவதை இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பார்த்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த பேட்டர் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறாரா கௌதம் கம்பீர்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கேகேஆர் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஷாருக் கான் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் ஆறுதல் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
கம்பீர் என்மீது நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்கினார் - சுனில் நரைன்!
இந்த ஆண்டு கௌதம் கம்பீர் மீண்டும் எங்கள் அணியில் இணைந்ததுடன் என்னை தொடக்க வீரராகவும் களமிறங்க நம்பிக்கை கொடுத்தார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் ஆகியோரை கட்டியணைத்ததால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24