Gt vs csk
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நிதீஷ் ராணா!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.
இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. சுனில் நரைன் (0) மற்றும் ஜெகதீஷன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் (20) மற்றும் நிதிஷ் ராணா (27) ஆகியோரும் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர். இதன்பின் களத்திற்கு வந்த ஜேசன் ராய், மொய்ன் அலியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கொல்கத்தா ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார்.
Related Cricket News on Gt vs csk
-
என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை - அஜிங்கியா ரஹானே!
இந்த ஆட்டத்திற்கு தெளிவான மனநிலையை விட எதுவும் காரணம் கிடையாது. தெளிவான மனநிலை இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஆஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும் என் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எனக்கு ஏன் பெஸ்ட் கேட்ச் விருது கொடுக்கவில்லை - எம் எஸ் தோனி!
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த போதும், அவருக்கு சிறந்த கேட்ச் விருது ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை தோனியே கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ...
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவது தனி மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா, பேட்டியில் தனது பவுலிங் பற்றியும் சிஎஸ்கே ரசிகர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ...
-
ஐபிஎல் 2023: நடராஜனின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய தோனி; வைரல் காணொளி!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர் நடராஜனின் குழந்தையுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி கொஞ்சிய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான் - ஐடன் மார்க்ரம்!
எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
இது எனது கெரியரின் கடைசி கட்டம் - எம் எஸ் தோனி!
நான் இரண்டாவது பேட்டிங் செய்ய தயங்கினேன். ஏனென்றால் பனி அதிகம் இல்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய கான்வே; ஹைதராபாத்தை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காணொளி: மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ஸ்டம்பிங் செய்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24