Advertisement
Advertisement

Gt vs rcb

கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
Image Source: Google
Advertisement

கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

By Bharathi Kannan April 21, 2024 • 22:49 PM View: 148

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகார் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 50 ரன்கள், ரிங்கு சிங் 24 ரன்கள், ரஸல் 27 ரன்கள், ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியில்  விராட் கோலி 18 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதார் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் 55 ரன்களுக்கும், ராஜத் பட்டிதார் 52 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் லோம்ரோர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Advertisement

Related Cricket News on Gt vs rcb

Advertisement