If australia
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டி அஹ்மதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இறங்கினர்.
ஹெட் 11 ரன்னிலும், வார்னர் 15 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித் 44 ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லபுசேன் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 47 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on If australia
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ளன. ...
-
உலகக் கோப்பையை வெல்வதற்கு வருவேன் - மார்ஷ் கூறியதாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் அறிவிப்பு!
மீண்டும் திரும்ப வந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு வருவேன் என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ...
-
இங்கிலாந்து போட்டியிலிருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
கோல்ஃப் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
நான் என்னால் முடிந்தவரை நன்றாக விளையாடுவேன் - டேவிட் வார்னர்!
நான் களத்திற்குள் சென்று என்னால் முடிந்ததை செய்யும் பொழுது, எனக்கு பின்னால் ஹெட் மற்றும் மார்ஷ் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உருவாக்கும் அழுத்தத்தை அவர்கள் எதிர் அணியின் மீது அப்படியே தொடர்கிறார்கள் என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற மிட்செல் ஸ்டார்கின் தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்திய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது பாகிஸ்தான்; இரண்டாவது வெற்றியைப் பெற்றது ஆஸி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24