In ben
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே அவரின் ஆட்டம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. இருப்பினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார்.
Related Cricket News on In ben
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!
48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தானின் ஹாரிஸ் ராவூஃப் படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023:இங்கிலாந்து ரன் வேட்டை; பாகிஸ்தானுக்கு 338 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்காமல் இங்கிலாந்தை நழுவ விட்டு விட்டோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது - பென் ஸ்டோக்ஸ்!
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!
என்னுடைய ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. நான் இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன். ஆனால் என்னுடைய மோசமான ஃபார்ம் எனது அணிக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கிறது என ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பையில் தடுமாறிய நடப்பு சாம்பியன்; இங்கிலாந்து கிரிக்கெட்டில் சலசலப்பு!
இங்கிலாந்து அணியில் ஒப்பந்தம் காரணமாக எழுந்த சலசலப்பு கூட ஒரு அணியாக இங்கிலாந்து வீரர்களை செயல்பட விடாமல் தடுத்து இருக்கலாம் என முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறியுள்ளார். ...
-
2023 உலக கோப்பையின் சிறந்த பவுலர் அவர் தான் - பென் ஸ்டோக்ஸ் பாராட்டு!
இத்தொடரில் விளையாடி வரும் எதிரணிகளில் முகமது ஷமி இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருவதாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு தனது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸை விளையாட வைக்க கூடாது - மைக்கேல் வாகன்!
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு சரியானவர்களாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47