Ind vs
பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஈசிபி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில், இங்கிலாந்து தொடரின் அட்டவணையை மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
அதாவது, இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி, செப்.14ஆம் தேதி முடிவடைகிறது. நாட்டிங்காம், லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல் மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்டு ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், பிசிசிஐ முன்வைத்ததாக கூறப்படும் கோரிக்கை என்னவென்றால், ஓல்ட் ட்ராஃபோர்டில் செப்.10ஆம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தேதியை மாற்றி, சற்று முன்னதாகவே அதாவது ஜுலை மாதமே நடத்தலாம். இதன் மூலம், செப்டம்பர் மாதம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Related Cricket News on Ind vs
-
அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்தான் பெஸ்ட் - விவிஎஸ் லக்ஷ்மன்
இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்வார் என்று இந்திய அணியின் முன்னாள் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். ...
-
புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழப்பு; ரசிகர்கள் இரங்கல்!
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் இன்று உயிரிழந்தார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பார்வையாளர்களுக்கு அனுமதி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நான்காயிரம் பாரவையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘முதல் ஸ்டாப் மும்பை’ பிசிசிஐ வெளியிட்ட ட்வீட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், மிதாலி ராஜ் ஆகியோர் ஒரே விமானத்தில் இன்று மும்பை வந்தடைந்தனர். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோப்பை இந்த அணிக்கு தான்; வாகன் அதிரடி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் இணையும் புதுமுகம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இறுதி போட்டிக்கு காத்திருக்கிறேன் - கேன் வில்லியம்சன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட காத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸி தொடருக்கு பிறகு சிராஜின்ஆட்டம் அபாரமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரெலிய தொடருக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளதென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் - ராஸ் டெய்லர் நம்பிக்கை!
காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
-
உலகில் எங்கு விளையாடினாலும் அங்கு இவர்கள் தான் ராஜா - இந்திய பந்துவீச்சாளர்களை புகழும் வாக்னர்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவர் என நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் ...
-
‘என்னால் வாஷியின் கனவு தடைபடக் கூடாது’ தனி வீட்டில் வசிக்கும் சுந்தர் - ரசிகர்கள் பூரிப்பு!
வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எம்.சுந்தர் தனி வீட்டில் வசித்து அலுவலகம் சென்று வருகிறார். ...
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24