India final
WTC 2023: இந்திய - ஆஸியை இணைத்து பிளேயிங் லெவனை உருவாக்கிய ரவி சாஸ்திரி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. மேலும் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுசெய்துள்ளார். அவரது அணியின் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரையும், ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாகா, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார்.
Related Cricket News on India final
-
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
-
கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கேஎல் ராகுல் விலகியுள்ள நிலையில், கேஎஸ் பரத்தை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளிப்படுள்ள டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் பயிற்சியின் போது காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இவரால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வாங்கித்தர முடியும் - வாசிம் அக்ரம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உனத்கட் அணியில் இடம் பெற்றால் நிச்சயமாக இந்தியாவிற்கு வெற்றியை வாங்கித் தரக் கூடிய ஒரு வீரராக இருப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் சதம் விளாசிய புஜாரா!
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடிவரும் சட்டேஷ்வர் புஜாரா கிளவ்ஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக பிரிஸ்டல் மைதானத்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது - ரவி சாஸ்திரி!
ஒருவேளை துரதிஷ்டவசமாக அவர் காயம் அடைந்து விட்டால் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!
இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47