J1 league
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன், 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Related Cricket News on J1 league
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வேவிற்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
நாங்கள் மிகக்குறைந்த இலக்கையே துரத்துவதன் காரணமாக இப்போட்டியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இன்றைய போட்டியில் நாங்கள் இழந்த விக்கெட்டுகள் அனைத்தும் எங்களது மோசமான ஷாட் தேர்வினால் மட்டும் தான் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்!
தோனி, கோலியை போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம். நானும் இந்த போட்டியில் அதை தான் செய்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஜோஸ் பட்லர் மிரட்டல் சதம்; கேகேஆரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய சுனில் நரைன்; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்; ஒற்றை கையில் பிடித்த ஆவேஷ் கான் - காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24