Mp vs ben
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரிக்கேன்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் அணிக்கு கலெப் ஜூவெல் - மிட்செல் ஓவன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய மிட்செல் ஓவன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் கலெப் ஜூவெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டர்மோட் மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.
Related Cricket News on Mp vs ben
-
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: மீண்டும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித்; ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: தொடர் வெற்றிகளை குவிக்கும் சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
BBL 2024-25: ஜேம்ஸ் வின்ஸ் சதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. ...
-
BBL 2024-25: பரப்பான ஆட்டத்தில் தண்டர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி தண்டர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
நடப்பு சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் ஏழு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24