Nz vs pak 3rd
SA vs PAK, 3rd ODI: சைம் அயூப் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்திருந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Nz vs pak 3rd
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ...
-
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
பாபர் ஆசாம் மேற்கொண்டு 09 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தான் பிளேயிங் லெவன்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs PAK, 3rd ODI: காம்ரன் குலாம் அசத்தல் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த் அஹ்மத் டேனியல், ஷநவாஸ் தஹானி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24