Odi world
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடர் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடக்கிறது. இந்த தொடர் வரும், மே 28 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Odi world
-
ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
-
கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்த தவறை இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன் என ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் - பாபர் ஆசாம் விருப்பம்!
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ...
-
அவருக்கான கவுதகள் திறந்தேவுள்ளன - டிரெண்ட் போல்ட் குறித்து கெவின் லார்சன்!
வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்டுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
பும்ராவால் ஷாஹினுக்கு நிகராக வர முடியது - அப்துல் ரசாக்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைவிட, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியே சிறந்தவர் என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் புதிய முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே அந்த பணியில் இருந்து நீக்கப்பட்ட மிக்கி ஆர்தர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்படி செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு உள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தாண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
ரோஹித்திற்கு பிறகு இவர்தான் கேப்டன் - பிசிசிஐ நிர்வாகி அதிரடி பேட்டி!
ரோஹித் சர்மாவிர்க்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கு இவரைத்தான் யோசித்து வைத்திருக்கிறோம் என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ...
-
போட்டி நேரம் குறித்த அஸ்வினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் கோரிக்கைக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24