Or award
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்றனர் பும்ரா & மந்தனா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
Related Cricket News on Or award
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷமார் ஜோசப்!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப்பும், சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தின் ஏமி ஹண்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. ...
-
முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருதுக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். ...
-
சுரேஷ் ரெய்னாவை கவுரவித்த மாலத்தீவு; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, மாலத்தீவு அரசால் ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது வழங்கப்பட்டது. ...
-
ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் டேரில் மிட்செல்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரரை இடித்த காரணத்தால் ரன் ஓட மறுத்த நியூசிலாந்தின் டேரில் மிட்செலுக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
கேல் ரத்னா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்!
டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ...
-
ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!
விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் விழா வரும் 13ஆம் தேதி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மிதாலி ராஜுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு!
விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ...
-
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை!
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24