Pakistan
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து.
Related Cricket News on Pakistan
-
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 94 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா டி20 தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி திட்டம்?
ஐசிசி நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், எதிவரும் சாம்பியான்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த கூப்பர் கன்னொலி, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து ஹாரிஸ் ராவுஃப் இவ்வாறு பந்துவீசுவதை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர் என்று பாகிஸ்தன் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பேட்டிங்கில் இன்று சிறப்பாக செயல்பட்டு ரன்களைச் சேர்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
-
AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக இங்கிலிஸ் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ...
-
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ...
-
அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்தது - முகமது ரிஸ்வான்!
எந்த சூழ்நிலை வந்தாலும் முயற்சியை கைவிடாமல் அணியின் வெற்றிக்காக போராட முடிவு செய்தோம். இதுபோன்ற கடினமான போட்டி குறித்து நீங்கள் ஏதும் விமர்சிக்க முடியாது என பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24