Rohit sharma
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்டை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஏல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் தீபக் ஹூடாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 69 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Rohit sharma
-
ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!
ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் ஒருநாள் முடிவு என்ற ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் - சௌரவ் கங்குலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
ஜூன் மாதம் நாடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சமன்செய்துள்ளார். ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!
ரோஹித் சர்மா போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
-
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47