Royal challengers
ஐபிஎல் 2023: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய வீரர்; ஆர்சிபிக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், இன்று நடைபெற்று வரும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. இஷான் கிஷான் 10 ரன்னிலும், கேமரூன் க்ரீன் 5 ரன்னிலும், ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அப்போது பவர்பிளே முடிந்து 7ஆவது ஓவரை கரண் சர்மா வீச வந்தார். அப்போது திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் களத்தில் ஆடி வந்தனர். போட்டியின் 7.3ஆவது பந்தில் திலக் வர்மா ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த ரீஸ் டாப்ளி பந்தை பிடிக்கும் முயற்சியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த நிலையில், மருத்துவர்கள் வந்து பார்த்தும் காயம் அதிகம் இருந்த நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். எனினும், ஸ்கேன் பரிசோதனையில் தான் காயம் குறித்து மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.
Related Cricket News on Royal challengers
-
‘ஈசாலா கப் நஹி’ - டூ பிளெசிஸின் கூற்றால் விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி!
"ஈசாலா கப் நம்தே" என்று கூறுவதற்கு பதிலாக "ஈசாலா கப் நஹி" என்று ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளெஸிஸ் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ...
-
மீண்டும் ஆர்சிபி அணிக்கு வருவீர்களா? - ஏபி டி வில்லியர்ஸ் பதில்!
ஐபிஎல் தொடரில் இருந்து பெற்ற ஓய்வை திரும்பப்பெற்று, மீண்டும் ஆர்சிபி அணிக்கு விளையாடுகிறாரா ஏபி டி வில்லியர்ஸ்? இந்த கேள்விக்கு அவரே பதில் கொடுத்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: தொடரின் முதல் பாதியிலிருந்து விலகும் படிதார்?
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ராஜத் படிதார் காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிறந்த பந்துவீச்சு யுனிட்டை கொண்ட அணி ஆர்சிபி தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐபிஎல் 16ஆவது சீசனின் சிறந்த பந்துவீச்சு அட்டாக்கை பெற்றிருக்கும் அணி ஆர்சிபி தான் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
18ஆம் நம்பர் எனக்கு பிடித்த நம்பரும் அல்ல, நான் கேட்டு வாங்கிய நம்பரும் அல்ல - விராட் கோலி!
18ஆம் நம்பர் எனக்கு பிடித்த நம்பரும் அல்ல, நான் கேட்டு வாங்கிய நம்பரும் அல்ல. இருந்தாலும் என் வாழ்க்கையில் இருந்து நீங்க முடியாத அளவிற்கு அந்த குறிப்பிட்ட நம்பர் அமைந்தது எப்படி? என்று தனது சமீபத்திய பேட்டியில் விராட் கோலி பேசியுள்ளார். ...
-
ஏதுவான முறையில் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்
இரண்டு ஆண்டுகள் பயோ பபுலுக்கு வெளியே தற்போது ஆர் சி பி ரசிகர்களுக்கு முன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் - விராட் கோலி!
இன்னும் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அது வெளிப்படும் என்றும் நம்புகிறேன் என சமீபத்திய பேட்டிகள் பேசியுள்ளார் விராட் கோலி. ...
-
அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி அணியின் கேப்டன் அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ...
-
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸும் தான் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் சிறந்தவர்கள் என இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இத்தனை வருடங்களில் என்னால் இந்த இரண்டு இன்னிங்ஸ்களை மறக்கவே முடியாது என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி. ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியில் இணைந்தார் மைக்கேல் பிரேஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் சூழலில் ஆர்சிபி அணியிலிருந்து விலகிய வில் ஜேக்ஸிற்கு பதிலாக நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் விலகல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24