Sa vs sl test
இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி - நாதன் லையன்!
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்றைய நாளை துவங்கிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்,இருந்த போதிலும் டிராவஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய நேதன் லியான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on Sa vs sl test
-
தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது - ரோஹித் சர்மா!
ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது வேலையை செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும், தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ரோஹித் சர்மா!
இது போன்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நாம் தோற்கும் போது பல விடயங்கள் நமக்கு சரியாக அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
முதல் இரண்டு போட்டிகளிலும் அக்சர் படேலை இப்படி 9ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், இந்தியா தோல்வியைத்தான் சந்தித்திருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இலக்கை வைத்து ஒரு சான்ஸ் பார்க்கலாம் - சட்டேஷ்வர் புஜாரா!
இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச் பிடித்து புஜாராவை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சட்டேஷ்வர் புஜாரா அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd Test: நாதன் லையன் சூழலில் சுருண்டது இந்தியா; எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார். ...
-
சர்ச்சையில் சிக்கிய இந்தூர் பிட்ச்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்றே இரு அணி வீரர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சி விஷயங்கள் காத்திருந்த சூழலில், தற்போது ஐசிசி எடுத்துள்ள முடிவால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. ...
-
IND vs AUS, 3rd Test: மிரட்டிய அஸ்வின், உமேஷ்; 88 ரன்கள் பின்னிலையில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
IND vs AUS: இந்தூர் பிட்ச் குறித்து பேட்டிங்க் பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது உண்மைதான். நாங்கள் நினைத்ததை விட பந்து நன்றாக திரும்பியது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 1st Test: இரண்டாது இன்னிங்ஸில் சரியும் தென் ஆப்பிரிக்கா; தாக்குப்பிடிக்கும் மார்க்ரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 40 வயது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24