Sl vs aus
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா- வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசியதுடன், அந்த ஓவரில் 28 ரன்களைச் சேர்த்து அனைவரையும் மிரளவைத்தார்.
Related Cricket News on Sl vs aus
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்லை அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய நூர் அஹ்மத் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அஹ்மத் பிடித்த ஆட்டத்தின் முடிவை மாற்றிய கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த ஆஸ்திரேலியா!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகள் படைக்கப்ப்ட்டுள்ளன. ...
-
T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மழை காரணமாக ஆஸ்திரேலிய அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் சாதனை - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்!
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணியின் பிராண்டன் மெக்முல்லன் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், ஹெட் அபார ஆட்டம்; ஸ்காட்லாந்து கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47