Sp gautam
கம்பீர் என்மீது நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்கினார் - சுனில் நரைன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷு, நரைனுடன் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார். தொடக்கத்தில் ஆட்டத்தை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய நரைன் போக போக அதிரடி காட்ட தொடங்கினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ரகுவன்ஷி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Sp gautam
-
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் ஆகியோரை கட்டியணைத்ததால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!
மகேந்திர சிங் தோனி குறித்து வெளிப்படையாக கூறவேண்டும் எனில் இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் அவர் தான் என கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை கட்டியணைத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துள்ளார். ...
-
அரசியலில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம் பி யுமான கவுதம் கம்பீர் தன்னை அரசியலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கும்படி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். ...
-
தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து கால் தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இனிமேலாவது தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!
பவர் பிளே ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் உங்கள் அணியில் இல்லை என்றால் எப்படி? என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
ஒரு மென்டராக நான் விடமாட்டேன் - மீண்டும் கோலியை சீண்டும் கம்பீர்!
எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்!
2013 ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கியதை வைத்து “நீ ஃபிக்ஸர்” என்று கௌதம் கம்பீர் களத்தில் தம்மை திட்டியதாக ஸ்ரீசாந்த் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
அவர் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொன்னார் - கௌதம் கம்பீர் மோதல் குறித்து ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
எல்எல்சி 2023 எலிமினேட்டர்: கெயில், ஓ பிரையன் போராட்டம் வீண்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47