Tamil cricket
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
விறுவிறுப்பான காட்டத்தை எட்டி இருக்கும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் அட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 25 ரன்கள் எடுத்த நிலையில் சார்லஸும், 14 ரன்கள் எடுத்த நிலையில் டூ பிளெசிஸும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அகீம் அகஸ்டே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், டிம் செய்ஃபெர்ட் 13 ரன்களுக்கும், பனுகா ராஜபக்சா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். அதன்பின் அகஸ்டேவுடன் இணைந்த டேவிட் வைஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்கீம் அக்ஸ்டே 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வாய்ப்பினை தவறவிட்டார்.
Related Cricket News on Tamil cricket
-
சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவோம் என்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
இங்கிலாந்து அணியின் கேப்டனாக நான் செயல்படுவது இதுவே முதல் முறை. அதனால் நான் விளையாட்டை வித்தியாசமாக பார்க்க வேண்டியிருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் கூறியுள்ளார். ...
-
IREW vs ENGW, 2nd T20I: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
துலீப் கோப்பை 2024: டிராவில் முடிந்தது இந்தியா பி - இந்தியா சி ஆட்டம்!
இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையேயான துலீப் கோப்பை லீக் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ...
-
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து, அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சி; இந்திய டி அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பணிச்சுமை காரணமாக எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஈயன் மோர்கன்; சச்சின், கோலிக்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ளார். ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs BAN: இன்று இந்தியா வந்தடையும் வங்கதேச அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று இந்தியா வந்தடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வெல்லும் - முகமது ஷமி நம்பிக்கை!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார் ...
-
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47