Tamil cricket
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், அந்த ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.
இதையெல்லாம் தெரிந்தே தான் மகேந்திர சிங் தோனி அப்போறுப்பை ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி விளையாடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார். அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை.
Related Cricket News on Tamil cricket
-
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்!
இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்றுவரும் பயிற்சி போட்டியில் உனாத்கட் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு போதிய பலத்துடன் இல்லை என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்திற்க் இரண்டாம் இடம் தான் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித், என்னை பொறுத்தவரை மிகச் சிறந்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடம் யாருக்கு? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் பதில் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47